HomeCinemaநடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு கோவை, ஐசிடி அகாடெமி வழங்கிய 'யூத் ஐகான் விருது.'

நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு கோவை, ஐசிடி அகாடெமி வழங்கிய ‘யூத் ஐகான் விருது.’

Published on

சமூகத்திலும், திரைத்துறையிலும் ஏற்படுத்திய நல்ல மாற்றங்களுக்காக நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு ‘யூத் ஐகான் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.

கோவை, ஐசிடி அகாடெமி தனது ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் 2024 விழாவை கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடத்தியது. மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

அடுத்த தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பது மற்றும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சப்மிட்டில் பல்வேறு கலந்துரையாடல்கள், வேலைக்கூடங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது.

இதில் நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு யூத் ஐகான் 2024 விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், டாக்டர் பழனிவேல் தியாகராஜன் வழங்கி கெளரவித்தார்.

இந்த விருது அவரது முயற்சிகளை மதிப்பதோடு மட்டுமல்லாது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைய தலைமுறையின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது.

விருது பெற்ற பின் பேசிய ஆர்ஜே பாலாஜி, “இந்த விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமையாக உள்ளது. சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து உழைக்க எனக்கு இது உத்வேகம் கொடுக்கிறது. இளைஞர்கள் அவர்களது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற உந்துதலை இது வழங்குகிறது” என்றார்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this