HomeCinema'ஜோ' வெற்றிப் பட ஜோடி ரியோ ராஜ், மாளவிகா மீண்டும் இணைந்த புதிய படம் பூஜையுடன்...

‘ஜோ’ வெற்றிப் பட ஜோடி ரியோ ராஜ், மாளவிகா மீண்டும் இணைந்த புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

ஜோ’ படத்தின் அதிரடி வெற்றிக்குப் பிறகு அந்த படத்தின் ஹீரோ ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடந்தது.

இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்’ நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில், புதுமுக இயக்குனர் ‘பிளாக்‌ஷிப்’ கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், ஜோ’ திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ, மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் களமிறங்குகிறார்கள். இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

படம் பற்றி பேசிய இயக்குநர் “திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக இந்தப்படம் இருக்கும்“ என்றார்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, மக்கள் தொடர்பு சதீஷ் குமார் என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this