HomeCinema100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து ZEE5 தளத்தில் சாதனை படைத்த ‘ரேகை’ வெப் சீரிஸ்!

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து ZEE5 தளத்தில் சாதனை படைத்த ‘ரேகை’ வெப் சீரிஸ்!

Published on

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் எம் தினகரன் திரைக்கதை அமைத்து இயக்கிய ரேகை வெப் சீரிஸ் ZEE5 இல் நவம்பர் 28-ம் தேதி வெளியானது.

ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் வண்டி ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது.

தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும் புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம், மக்களின் பேராதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this