HomeCinemaஅருள்நிதி – இயக்குநர் முத்தையா கூட்டணியின் 'ராம்போ' நேரடியாக சன் நெக்ஸ்ட்'டில் வெளியாகியுள்ளது!

அருள்நிதி – இயக்குநர் முத்தையா கூட்டணியின் ‘ராம்போ’ நேரடியாக சன் நெக்ஸ்ட்’டில் வெளியாகியுள்ளது!

Published on

நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் பட ‘ராம்போ.’

ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம்.

அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

படம் குறித்து பேசிய நடிகர் அருள்நிதி “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த முறை அவர் நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்தபோது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சன் டிவி நெட்வொர்க் தயாரிப்பில் இப்படம் உருவானது எனக்கே பெரும் உற்சாகம் அளித்தது,” என்றார்.

படத்தில் புதிய முகமாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகியுள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரஞ்சித் சஜீவ் வில்லனாக நடித்துள்ளார். R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதிரடி காட்சியமைப்புகள், எமோஷன், இசை, ஆக்சன், என “ராம்போ” ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சன் நெக்ஸ்ட்-இல் தற்போது “ராம்போ” உட்பட பல புதிய தமிழ் படங்கள் 3 மாத சந்தாவாக வெறும் ரூ.299-க்கு கிடைக்கின்றன!

சன் நெக்ஸ்ட்-இல் தற்போது வெளியாகியுள்ள முக்கிய படங்கள்:

இந்திரா – வசந்த் ரவி, மெஹ்ரீன் கௌர் பீர்ஸிதா நடிப்பில், சபரிஷ் நந்தா இயக்கியுள்ள புதிய படம். இந்த க்ரைம் திரில்லர் திரைப்படம், ஒரு தொடர் கொலை வழக்கின் பின்னணியில், அழுத்தமான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

சரண்டர் – தர்ஷன் தியாகராஜா, லால் நடிப்பில், கவுதமன் கணபதி இயக்கத்தில் உருவான மனித உணர்ச்சிகளும், தியாகமும் கலந்த அதிரடி ஆக்சன் படம்.

மெட்ராஸ் மேட்னி – காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் ஒரு அழகான டிராமா திரைப்படம்.

சன் நெக்ஸ்ட் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 4000+ திரைப்படங்கள், 44+ நேரலை சேனல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this