HomeMovie Reviewபுஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம்

புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம்

Published on

கிடா, எறும்பு, குரங்கு பெடல் என சமீபமாக குழந்தைகளை மையப்படுத்திய படங்களின் வரவு தொடர்கிற நிலையில், புதிதாய் இணைகிறது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி.’

குடிப்பதற்கு காசில்லாமல் தவிக்கும் அப்பா, தன்னுடைய சிறு பிள்ளைகள் பாசமாய் வளர்க்கும் ஆட்டுக்குட்டி புஜ்ஜியை, ஊர் பேர் தெரியாத யாரிடமோ விற்றுவிடுகிறார். பிள்ளைகள் அந்த புஜ்ஜியை கண்டுபிடிக்க களமிறங்கி ஊர் ஊராய் அலைந்து திரிகிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா என்பதே மிச்சமிருக்கும் கதை, திரைக்கதை…

புஜ்ஜியை உயிருக்கு உயிராக நேசிக்கும் சிறுமி பிரணிதி, பிரணிதியின் அண்ணன் கார்த்திக் விஜய், அவர்களுடன் இணைந்து புஜ்ஜியைத் தேடி பெரும் சிரமத்திற்கு ஆளாகிற இளம்பெண் லாவண்யா கண்மணி மூவரும் உணர்வுபூர்வமாக நடித்திருக்க,

அவர்களின் தேடலில் புஜ்ஜி கசாப்புக் கடைக்காரரிடம் அறுபட போய் தப்பிப்பது, அந்த கடைக்காரரின் மனைவி மகப்பேறு சிகிச்சைக்காக போராடுவது, அவருக்கு பிள்ளைகள் லட்சக்கணக்கில் பணம் தந்து உதவுவது, பிள்ளைகள் அயோக்கியர்களால் கடத்தப்படுவது, காமவெறி போலீஸிடம் சிக்குவது என திரைக்கதையில் கிரைம் திரில்லருக்கு உண்டான பரபரப்பை கலந்திருக்கிறார் இயக்குநர் ராம் கந்தசாமி.

துணிச்சலோடும் நேர்மையோடும் செயல்படுகிற காவல்துறை அதிகாரியாக நக்கலைட்ஸ் வைதீஸ்வரி,  இளவயது பண்ணையார் கமல்குமார் இருவரின் துடிப்பான நடிப்போடு நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வருகிற பலருடைய குறையில்லா நடிப்பையும், அருண்மொழிச் சோழனின் தரமான ஒளிப்பதிவையும் சேர்த்துக்கொண்டு பலம் பெற்றிருக்கிறது கதைக்களம்.

‘புஜ்ஜி புஜ்ஜி என் செல்லத்தங்கம்’ பாடலில் தவழும் இதமான இசைக்குச் சொந்தக்காரர் கார்த்திக் ராஜா.

விற்பனையான புஜ்ஜியை திருப்பி வாங்க நன்கொடைபோல் பலரிடமும் 50, 100 என பண வசூல் செய்வது ரசிக்க வைக்கிறது. அந்த காட்சிகளை உதவி என்று கேட்டால் மக்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் எத்தனை பேர் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் மக்களுக்கு குறிப்பாக படம் பார்க்கும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் புரிய வைப்பதற்கான முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

குறைகளிருந்தாலும், குழந்தைகளின் மனதை, அவர்களின் உணர்வை பதிவு செய்ததில் புஜ்ஜி அட் அனுப்பட்டி குழந்தைகள் பட வரிசையில் ரொம்ப கெட்டி!

                    Rating 3.5/5

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...
கிடா, எறும்பு, குரங்கு பெடல் என சமீபமாக குழந்தைகளை மையப்படுத்திய படங்களின் வரவு தொடர்கிற நிலையில், புதிதாய் இணைகிறது 'புஜ்ஜி அட் அனுப்பட்டி.' குடிப்பதற்கு காசில்லாமல் தவிக்கும் அப்பா, தன்னுடைய சிறு பிள்ளைகள் பாசமாய் வளர்க்கும் ஆட்டுக்குட்டி புஜ்ஜியை, ஊர் பேர் தெரியாத யாரிடமோ விற்றுவிடுகிறார். பிள்ளைகள் அந்த புஜ்ஜியை கண்டுபிடிக்க களமிறங்கி ஊர் ஊராய் அலைந்து திரிகிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா...புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம்