Friday, December 5, 2025
spot_img
HomeCinemaதமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு மலையாள திரைப்படக் குழுவினர் உருவாக்கிய 'சேவகர்'...

தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு மலையாள திரைப்படக் குழுவினர் உருவாக்கிய ‘சேவகர்’ விரைவில் ரிலீஸ்!

Published on

முழுக்க முழுக்க மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ள திரைப்படம் ‘சேவகர்.’

அரசியல் த்ரில்லரான இந்த படத்தில் பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித், மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார் நடித்துள்ளனர்.

சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது.இதைக் கண்டு கதாநாயகன் பிரஜின் குமுறுகிறார்.

தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார்.அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது . அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் இது.

முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. படத்தில் பிரசன்னா பாடியுள்ள வா வா தமிழா, பாடல், மற்றும் இரண்டு பாடல்கள் படம் வெளியான பின் பேசப்படும்.

இப்படத்தைத் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார் .இவர் அமெரிக்காவில் இருக்கிறார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் சில காலம் வாழ்ந்தவர். திரைப்படங்கள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பால்ய வயதிலேயே ஏராளமான திரைப்படங்களை ரசித்துப் பார்த்ததுண்டு.திரைப்படங்களுக்கான சுவரொட்டிகளைக்கூட ரசித்து ரசித்துப் பார்த்தவர். தானும் ஒருநாள் படம் தயாரித்து தனது பெயரும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். தனது உலகியல் தேவைகளுக்காகப் பொருளீட்டுவதற்காக அமெரிக்கா சென்றார்.தனது நண்பர் சந்தோஷ் கோபிநாத் படம் இயக்க இறங்கிய போது அவருக்குக் கை கொடுத்து உதவ முடிவெடுத்து, தயாரிப்பாளராகியுள்ளார்.அதன் வழியே தனது பால்ய காலத்துக் கனவையும் மீட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனலாம். அப்படித்தான் இந்த படம் உருவாகியுள்ளது.

 

Latest articles

தவிர்க்க முடியாத காதல் கதையான  ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய...

டாக்டர் அருளானந்து பிறந்தநாளில் ‘விஷன் சினிமா ஹவுஸ்’ வெளியிட்ட ‘ஹைக்கூ’ படத்தின் கலக்கல் போஸ்டர்!

'விஷன் சினிமா ஹவுஸ்' டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து தலைமையில் செயல்படுகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து...

சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது ரியோ – வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா

ரியோ - வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. சென்னையில்...

‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த பெரியளவிலான வரவேற்பு… அதேபோல திரையரங்குகளிலும் வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை

கீதா கைலாசம் நடிப்பில் வரும் டிசம்பர் 5 அன்று வெளியாகவிருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட...

More like this

தவிர்க்க முடியாத காதல் கதையான  ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய...

டாக்டர் அருளானந்து பிறந்தநாளில் ‘விஷன் சினிமா ஹவுஸ்’ வெளியிட்ட ‘ஹைக்கூ’ படத்தின் கலக்கல் போஸ்டர்!

'விஷன் சினிமா ஹவுஸ்' டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து தலைமையில் செயல்படுகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து...

சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது ரியோ – வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா

ரியோ - வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. சென்னையில்...
error: Content is protected !!