HomeCinemaராசு மதுரவனின் உதவியாளர் திம்மராயன் சுவாமி இயக்கிய 'பூம்பூம் மாட்டுக்காரன்' குறும்படத்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்...

ராசு மதுரவனின் உதவியாளர் திம்மராயன் சுவாமி இயக்கிய ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ குறும்படத்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு! 

Published on

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Ifa நிறுவனம் இணைந்து நடத்திய 2023-ம் ஆண்டிற்கான இன்டர்நேஷனல் குறும்பட போட்டி கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் 12 குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.

போட்டியில், இயக்குநர் ராசு மதுரவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திம்மராயன் சுவாமி இயக்கிய ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ படம் முதல் பரிசுக்குத் தேர்வாகி, ரூபாய் 1 லட்சத்தை தட்டி சென்றது.

திரைப்பட உதவி இயக்குநரின் வாழ்க்கையை மையமாக வைத்து,  ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு பெரிய வலி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேசிய விருது பெற்ற எடிட்டர் சபாபு ஜோசப் பணியாற்றியுள்ளனர்.

ராஜராகவன், சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீதேவி, பி எம் முருகேசன் ஆகியோரது நடிப்பில் உருவான இந்த குறும்படம் கடந்த ஜூலை 31-ம் தேதி இயக்குநர்கள் சங்கத்தில் ஆர்கே.செல்வமணி, பேரரசு, எழில், சரண், சரவண சுப்பையா மற்றும் உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் திரையிடப்பட்டது. பார்த்த அனைவரது படத்தைப் பாராட்டி, இந்த படம் இன்னும் பல விருது விழாக்களை அலங்கரிக்கப் போகிறது’ என்று குறிப்பிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

போட்டியில் முதல் பரிசு வென்றதையடுத்து, பரிசுக்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் Ifa தயாரிப்பாளர் சரவணன பிரசாத், ஆர் கே செல்வமணி இருவரும் இணைந்து திம்மராயனிடம் வழங்கி வாழ்த்தினார்கள்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this