HomeCinemaவாழ்த்து மழையில் நனையும் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

வாழ்த்து மழையில் நனையும் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

Published on

பிரதீப் ரங்கநாதன் சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞன். இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞனாக சினிமா கனவுகளோடு வாழ்வைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு, இயல்பிலேயே கதை சொல்லும் திறமை பளிச்சிட்டது. தான் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தின் இயல்பை, கதையாக்கி அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படம் திரைத்துறையில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த குறும்படம் மூலம் அவருக்கு கோமாளி பட வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில் அவர் இயக்கிய “கோமாளி” திரைப்படம் பெரு வெற்றி பெற்று, 100 நாட்களை கடந்தது. பின்னர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில்,  அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படத்தை திரைக்கதையாக்கி, தானே நடித்து இயக்கிய “லவ் டுடே” படம், தமிழ் திரையுலகில் புயலைக் கிளப்பி, பல  புதிய சாதனைகள் படைத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேசுபொருளான “லவ் டுடே” படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் நடிப்பில் 100 கோடியை தாண்டிய படமாக சாதனை படைத்தது. பிரதீப் ரங்கநாதன் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறினார்.

தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில்,  முன்னணி  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில்,  ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில்,  புதுமையான முறையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத இளம் நட்டத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....