HomeCinemaதனுஷ் பிறந்தநாளில் ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை.’

தனுஷ் பிறந்தநாளில் ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை.’

Published on

நடிப்பு அசுரன் தனுஷின் பிறந்தநாளன்று ‘புதுப்பேட்டை’ படத்தை ரீ ரிலீஸ் செய்யவிருக்கிறது ஏடிஎம் புரொடக்சன்ஸ்.

நடிகர்களில் தனுஷ் தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.

இன்னொரு பக்கம் பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன, அந்த வகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அதே ஜூலை-26ஆம் தேதி தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது. ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும் பிரபல விநியோகஸ்தருமான மதுராஜ் இந்தப்படத்தை தமிழகமமெங்கும் வெளியிடுகிறார். சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பில்லா-2’ படத்தையும் இவர் தான் ரீ ரிலீஸ் செய்திருந்தார்.

2006ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’, ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தவகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்க போகிறது!

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this