HomeCinemaநிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் 'பருவு' சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

Published on

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை… நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 ‘பருவு’ சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்!

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடிக்க, சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ள சீரிஸ் ‘பருவு.’

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸ் இது.

கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை . ZEE5 இல் பருவு பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது. அன்பு, விசுவாசம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பற்றியும், மனிதர்களின் தெரியாத பக்கங்களை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டுக் காட்டும். ZEE5 இல் முதல் எபிஸோடை இலவசமாகப் பாருங்கள்.

காட்டுத்தனமான சாதி அரசியலால் ஆளப்படும் உலகில், சண்டையிடும் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதன் மூலம் சமூக விதிமுறைகளை மீறத் துணியும் ஒரு ஜோடியின் கதையைச் சொல்கிறது பருவு. அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், ஜாதிய அடுக்குகள், குடும்ப மரியாதை என சமூகத்தின் பல அடுக்குகளைத் தாண்டி, தங்களின் காதலில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா? என்பதை, இந்த சீரிஸ் பல பரபரப்பான திருப்பங்களுடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்கிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this