HomeCinemaராஷ்மிகாவின் பிறந்தநாளை உற்சாகமாக்க ‘புஷ்பா தி ரூல்' படக்குழுவினர் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்!

ராஷ்மிகாவின் பிறந்தநாளை உற்சாகமாக்க ‘புஷ்பா தி ரூல்’ படக்குழுவினர் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்!

Published on

அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த புகழ்பெற்ற பான்-இந்தியா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.

இன்று ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.

திறமையான படக்குழுவின் உழைப்பில் கம்பீரத்துடன் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் அட்டகாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது. ‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்ய, எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this