FACEON MEDIYAA (OPC) PVT LTD., நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச ஃபேண்டஸி திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆத்ரேயா இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.வி.உதயகுமார் மற்றும் சி.கே.முருகன் பாடல்கள் எழுத, ராஜேஷ்குமார் வசனம் எழுதுகிறார். மணிகண்டன் மற்றும் தாமரை நடனக் காட்சிகளை வடிவமைக்க, விஜய் ராஜான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சதிஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் துவக்க விழா 11 ஆம் தேதி, 11 ஆம் மாதம், சரியாக 11:11 மணிக்கு, அதாவது 11.11 : 11:11 mints- ல் சென்னை, பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா பேசுகையில், “அன்பே மஹாசக்தி, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. சுந்தரபாண்டிய ராஜா என் பெயர். அதற்கு காரணம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வெளியான போது தான் நான் பிறந்தேன். என் அம்மா எம்.ஜி.ஆர் ரசிகை என்பதால் எனக்கு அந்த பெயர் வைத்து விட்டார். என் பெயருக்கு ஏற்றவாறு இத்தனை வருடங்கள் கழித்து ராஜா வேடம் போடுவதற்கான ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் குழந்தை முருகன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது சாதாரண உழைப்பு இல்லை. நான்கு மாதங்கள் கடினமாக உழைத்து இங்கே வந்திருக்கிறோம். குழந்தை முருகன் சாரின் எண்ணங்கள் விசாலமானது. அவர் எளிமையாக இருப்பதால் சாதாரணமாக நினைக்க வேண்டாம், அவருக்குள் இருக்கும் எரிமலை இந்த படத்தின் மூலம் வெடிக்கும். தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல உலக சினிமாவுக்கே குழந்தை முருகன் சார் யார், என்பதை இந்த படம் மூலம் நாங்கள் காட்டுவோம்.
என் நடிப்பு, முயற்சி மற்றும் என் 18 வருட சினிமா அனுபவம் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்தி இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்க பாடுபடுவேன், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் என் நன்றிகள். சிறிய நடிகர் என்று பார்க்காமல், என்னுடன் நடித்த யாஷிகா, அஸ்மிதா ஆகியோருக்கு என் நன்றிகள். இந்த படம் வெற்றி பெற உங்கள் அத்தனை பேரின் ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும், என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை மைதிலி பேசுகையில், “எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த முருகன் சார் மற்றும் ராஜா சாருக்கு நன்றி. நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன், இந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவு வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகை மகாலட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. நான் ஐதராபாத்தில் இருந்து வருகிறேன், இப்போது சென்னையில் இருக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
நடிகை அம்ருதா ராஜா பேசுகையில், “அனைவருக்கும் வனக்கும், நான் பெங்களூரை சேர்ந்தவள். எனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்த முருகன் சாருக்கு நன்றி. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியானதும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.
கமல்ஜி பேசுகையில், “நான் ஊட்டியில் இருந்து வந்திருக்கேன். முருகன் சார் இந்த படத்திற்காக நிறைய கஷ்ட்டப்பட்டிருக்கிறார், அதை நான் நேரில் பார்த்தேன். அவரும் நானும் 15 வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடன இயக்குநர் தாமரை பேசுகையில், “நான் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்த படத்தின் கதை புதிதாக இருக்கிறது. இந்த கதையை கேட்கும் போது சந்தோஷப்பட்டேன். முழந்தை முருகன் சார் கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உழைப்புக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு வாய்ப்பளித்த ராஜா சார் மற்றும் முருகன் சாருக்கு நன்றி.” என்றார்.
நடிகை சிஞ்சனா பேசுகையில், “நான் கர்நாடகாவை சேர்ந்தவள், எனக்கு இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
நடிகை தியாரா பேசுகையில், “நான் பெங்களூரில் இருந்து வருகிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு ராஜா சார் மற்றும் முருகன் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடிப்பது எக்சைட்டாக இருக்கிறது. நன்றி.” என்றார்.
நடிகை ஸ்ரீநிசா பேசுகையில், “நான் பெங்களூரில் இருந்து வருகிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ராஜா சார் மற்றும் குழந்தை முருகன் சாருக்கு நன்றி.” என்றார்.
நடிகை மேஹா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் பெங்களூர் பெண். இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மற்றும் ராஜா சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.” என்றார்.
நடிகை நயனா சாய் பேசுகையில், “இயக்குநர் குழந்தை முருகன் சார், இந்த கதையை என்னிடம் சொன்ன போது வித்தியாசமாக இருந்தது. தலைப்பை போலவே படமும் ரொம்ப யூனிக்காகவும், வித்தியாசமாகவும் இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
நடிகை அஸ்மிதா பேசுகையில், “ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. பைசாசி படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் முருகன் சாரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். ஒரு படம் பண்ணப் போவதாக என்னிடம் சொன்னார். அதை கதையாக சொன்ன போது ரொம்ப நல்லா இருந்தது. படம் வெளியான பிறகு நீங்களும் பார்க்க போகிறீர்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
பைசாசி படத்தின் இணை இயக்குநர் பிரகாஷ் பாபு பேசுகையில், “முருகன் எனக்கு 18 வருடங்கள் பழக்கம். திருமணம் முடிந்ததும் என்னால் பீல்டுக்குள்ள வர முடியல. ஆனால், முருகன் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தார். இந்த படத்தை மூன்று முறை எடுக்க முயற்சித்து முடியாமல் போய்விட்டது. இந்த முறை எப்படியாவது எடுத்துவிட வேண்டும், என்று முயற்சித்து முடித்திருக்கிறோம். முருகன் சாதாரணமானவர் அல்ல, அவர் உழைப்பு மிகப்பெரியது. இந்த படத்தின் மூளை அவர் தான். அவர் மூளை தான் இந்த படம் சிறப்பாக வருவதற்கு காரணம். இந்த படத்திற்காக ஹீரோ ராஜா பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார், அவருக்கு நன்றி. நான், என் மனைவி, ராஜா சார் மற்றும் முருகன் நான்கு பேரும் இணைந்து படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த படத்தை எப்படி பிரமாண்டமாக எடுக்கலாம், அதே சமயம் செலவுகளை எங்கு குறைப்பது, படத்தின் தரத்தை எப்படி அதிகரிப்பது, என்று மிக சரியான திட்டமிடலுடன் முருகன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை சுப்ரியா பிள்ளை பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் ஐதராபாத்தில் இருந்து வந்திருக்கிறேன். இயக்குநர் முருகன் சாரை எனக்கும் ரொம்ப நாளாக தெரியும். இந்த கதை பற்றி ஏழு மாதங்களாக தெரியும். மிக சிறப்பான கதை. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருந்தோம். சிறப்பான இதிகாச படம் இது. இதை தொடங்க பல நாட்களாக திட்டமிட்டு இப்போது தொடங்கியிருக்கிறோம். இயக்குநர் முருகன் சார், ராஜா சாருக்கு நன்றி. எனக்கு மிக சிறப்பான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த கதாபாத்திரம் சவலானது. தமிழில் நன்றாக பேச வேண்டும். அதற்காக இப்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் குழந்தை முருகன் மற்றும் நாயகன் சுந்தரபாண்டியராஜா, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

