HomeGeneralகாந்தாரா ரிஷப் ஷெட்டி வெளியிட்ட, டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் 'பிக்காசோ' படத்தின்...

காந்தாரா ரிஷப் ஷெட்டி வெளியிட்ட, டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்குகிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.
டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் மாறுபட்ட காட்சியமைப்பை உருவாக்குகின்றன.
மேலும், ‘பிக்காசோ’ என்ற தலைப்பு கையால் வரையப்பட்ட மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றிருப்பது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. படத்தின் கதையும் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இரு நடிகர்களின் திரை இணைவு, ‘பிக்காசோ’ படத்தை சுவாரஸ்யமான திரைப்படமாக மாற்றியுள்ளது.
இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் படத்தின் உலகம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

சந்தீப் கிஷன் நடிக்க ஜேசன் சஞ்சய் இயக்கிய’சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ – ரிலீஸ் நிகழ்வு உற்சாகமாக நடந்தது!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது....

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது....

More like this