HomeCinemaபவதாரிணி இசையமைத்த கடைசிப் படம் ‘புயலில் ஒரு தோணி’ விரைவில் வெளியீடு! படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கப்...

பவதாரிணி இசையமைத்த கடைசிப் படம் ‘புயலில் ஒரு தோணி’ விரைவில் வெளியீடு! படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கப் போவதாக இயக்குநர் பேட்டி

Published on

புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் நடித்துள்ள ‘புயலில் ஒரு தோணி’ படத்தை ஈசன் இயக்க, ‘பி.ஜி.பிக்சர்ஸ்’ ரோமிலா நல்லையா தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த கடைசித் திரைப்படம் இது.

படம் பற்றி இயக்குநர் ஈசனிடம் பேசியபோது, பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே படத்துக்கு பவதாரிணிதான் இசையமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் பவதாரிணி மிக விரைவாகவே கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். பாடல்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். பின்னணி இசையையும் பவதாரிணி மிக நேர்த்தியாக அமைத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மரணம். அவர் இல்லை என்பதை இப்போதும் நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவரது இசை. படம் விரைவில் வெளியாகும். அதன் வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்போம்” என்றார்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this