HomeCinemaடொவினோ தாமஸ் நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியீடு!

டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

Published on

டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.
இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
‘பள்ளிச்சட்டம்பி’ டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான ‘குயின்’, ‘ஜன கண மன’ மற்றும் ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘ஜன கண மன ‘ திரைப்படத்தை பாராட்டியது… பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) – பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம்
 ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this