HomeCinemaநடிகர் வெற்றி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடிக்கும் 'பரீட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

நடிகர் வெற்றி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடிக்கும் ‘பரீட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Published on

‘8 தோட்டாக்கள்’ வெற்றி கதாநாயகனாக, என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘பரீட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார்.

கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது.

சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தில் போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார். கேப்டன் எம் பி ஆனந்த் மற்றும் கே எஸ் கே செல்வகுமார் இருவரும் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக தயாரிப்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this