HomeCinemaடொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய 'பள்ளிச்சட்டம்பி' ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில்...

டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! 

Published on

டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில்  முக்கியமான படமாக அமைகிறது.
இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஷிகார் ‘எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு – ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் – மம்மூட்டி – ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ சௌபின் ஷாஹிர் மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.
தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 – 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
‘பள்ளிச்சட்டம்பி’ ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....