HomeCinemaசினிமா என்பது கணிக்க முடியாத கேம்! -பறந்து போ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் ராம் 

சினிமா என்பது கணிக்க முடியாத கேம்! -பறந்து போ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் ராம் 

Published on

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து பட வெற்றிக்கு துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் ராம், “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் பிரதீப் சார் இந்தப் படத்திற்கு பெரிய பலம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சார் படம் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டதற்கு நன்றி. சுரேஷ் சந்திரா சார் மற்றும் டீமுக்கு நன்றி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகனுக்கும் என் மனைவி, மகளுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சிவா, “மனதார அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலி, மதுரை, சேலம் எனப் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போய்க் கொண்டிருக்கிறோம். கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அருமையான இசை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவன் இசை படத்திற்கு இல்லையே என்ற குறை எங்கேயும் தெரியாமல் வைத்திருந்தார் சந்தோஷ். ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார். ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this