HomeCinemaகேப்டன் சினி கிரியேஷன்ஸ் வெளியீடாக 500 தியேட்டர்களில் ஜூன் 13-ல் ரிலீஸாகிறது சண்முகபாண்டியனின் 'படை தலைவன்.'

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் வெளியீடாக 500 தியேட்டர்களில் ஜூன் 13-ல் ரிலீஸாகிறது சண்முகபாண்டியனின் ‘படை தலைவன்.’

Published on

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘படை தலைவன்.’

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ வெங்கடேஷ், எஸ் எஸ் ஸ்டேன்லி, லோகு என் பி கே எஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றிள்ளார். தமிழகமெங்கும் ஜூன் 13-ம் தேதி 500 திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this