HomeCinemaடாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குநர் ஹரி இணையும் புதிய படம் துவங்கியது!

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குநர் ஹரி இணையும் புதிய படம் துவங்கியது!

Published on

அந்தகன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குநர் ஹரி.

நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இன்று இந்த படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குநர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குநர் என தனி முத்திரை பதித்தார்.

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this