HomeCinemaசத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை; எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார்...

சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை; எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்! -பெருசு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சாந்தினி பேச்சு .

Published on

நடிகர் வைபவ், அவரது சொந்த அண்ணன் சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடிப்பில், இளங்கோ ராம் இயக்கியிருக்கும் ‘பெருசு’ திரையரங்குகளில் மார்ச் 14 அன்று வெளியாகிறது. முன்னதாக டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் நடிகர் வைபவ், “பெருசு குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் இளங்கோ ராம், “‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.

நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எப்படி படமாக்கப் போகிறார்கள் என்று ரொம்ப யோசித்தேன். அடல்ட் காமெடியை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுளிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். ’பெருசு’ நின்னு பேசும்” என்றார்.

நடிகை சாந்தினி, “இந்த வருடத்தில் நான் நடித்த மூன்றாவது படம் ரிலீஸாகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் படத்தை நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம்” என்றார்.

விநியோகஸ்தகர் சக்திவேலன், “படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா இன்னொரு மனோரமா மாதிரி. இவங்களும் தீபாக்காவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நான்தான் வைபவும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் அதை சுவாரசியமாகவும் முகம் சுளிக்காத விதமாகவும் எடுப்பார்கள். அப்படித்தான் ‘பெருசு’ உருவாகியுள்ளது” என்றார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this