HomeCinemaகாதலர் தினத்தில் வெளியானது பாலுமகேந்திராவின் மாணவர் இயக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்.’  

காதலர் தினத்தில் வெளியானது பாலுமகேந்திராவின் மாணவர் இயக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்.’  

Published on

பாலுமகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கும் படம்  ‘பேரன்பும் பெருங்கோபமும்.’

‘இசைஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகியுள்ளது.

அதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த படத்தை ‘E5 என்டர்டைன்மென்ட்’ காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் பேசியபோது, ‘கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் உருவாக்கியுள்ளோம்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஜே.பி. தினேஷ்குமார்
படத்தொகுப்பு – ராமர்
கலை இயக்கம் – சரவணன்
மக்கள் தொடர்பு – ஜான்சன்

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this