HomeMovie Reviewஓ பட்டர்ஃபிளை சினிமா விமர்சனம்

ஓ பட்டர்ஃபிளை சினிமா விமர்சனம்

Published on

வித்தியாசமான சப்ஜெக்டில் உருவாகும் படைப்புகளைத் தேடித்தேடி பார்ப்பவர்களுக்கான படம்.

அந்த இளம்பெண் கணவனுடன் கொடைக்கானல் டிரிப் போன இடத்தில், முன்னாள் காதலனை சந்திக்க, அந்த காதலன் கணவனுக்கும் நண்பனாக இருக்க அதனால் நடக்கும் விளைவுகளே ஓ பட்டர்ஃபிளையின் கிரைம்திரில்லருக்கு சமமான ஸ்கிரீன்பிளே…

அன்பான கணவனுக்கும் டார்ச்சர் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மன உளைச்சலை சரியானபடி வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதிதா சதீஷ்.

அவரது கணவனாக வருகிற அதுல், மனைவியின் முன்னாள் காதல் தெரிந்து காதலனுடன் பேசிப் பழகும் சூழ்நிலையில் தவிப்பு, கோபம், விரக்தி என உணர்வுகளை நடிப்பில் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்.

சிபி சந்திரன் டாக்ஸிக் காதலனாக முன்னாள் காதலியை அணுகும் விதம் மோசமானது. அதற்கேற்ப மெல்லிய வில்லத்தனத்தை காண்பிக்கிறார்.

பட்டாம்பூச்சிகளை குழந்தைகளாக கருதி வளர்த்து, பறக்க விடுகிற வினோத மனிதராக நாசரின் நடிப்பும், சோடாபுட்டி கண்ணாடி ஜோதிடராக கீதா கைலாசம் இருவரும் கவனம் பெறுகிறார்கள். லெஷ்மிபிரியா சந்திரமெளலி ஜஸ்ட் எட்டிப் பார்த்தாலும் மனதில் பதிகிறார்.

கொடைக்கானலின் அழகை வித்தியாசமான கோணங்களில் காண்பித்திருக்கிறார் வேதராமன் சங்கரன். வைசாக் சோமநாதனின் பின்னணி இசை கிரைம் திரில்லர் மூடுக்கு கொண்டு போகிறது.

முக்கோண காதல் கதையை சைகலாஜிக்கல் திரில்லராக பார்ப்பது சற்றே புதுமையாக இருக்க, மேக்கிங்கும் அசத்துகிறது.

Rating 3 / 5 

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this