HomeCinema'ஒடேலா 2' படத்தின் நாயகியாக தமன்னா! துவங்கியது படப்பிடிப்பு.

‘ஒடேலா 2’ படத்தின் நாயகியாக தமன்னா! துவங்கியது படப்பிடிப்பு.

Published on

நடிகை தமன்னா, இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில், மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ வில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு காசியில் பிரமாண்டமாக துவங்கியுள்ளது!

தமன்னாவுடன் ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த 2022 இல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் சீக்வல் ‘ஒடேலா 2’ என்ற பெயரில் உருவாகிறது. கதை, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கதை மிகப்பெரியதாக இருக்கும்.

’ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார்.

’ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது. இதன் சீக்வல் கதை கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது சிவபெருமானின் திரிசூலத்தைக் காட்டுகிறது. அவர் மல்லண்ண சுவாமியாகவும் வணங்கப்படுகிறார். எண் 2, திரிசூலம் மற்றும் மூன்று கோடிட்ட விபூதி, அதன் மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை நாம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதாக இது உள்ளது.

இந்தக் கதையில் விஎஃப்எக்ஸ் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில் ‘ஒடேலா 2’வில் அனைத்துப் பிரிவிகளையும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக் கொள்வார்கள். சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் கலை இயக்குநர். மக்கள் தொடர்பு ரேகா.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this