HomeCinemaநிர்வாகம் பொறுப்பல்ல சினிமா விமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல சினிமா விமர்சனம்

Published on

பேராசைக்காரர்களின் உலகத்தில் மோசடிக்காரர்கள்தான் ராஜாக்களாக இருப்பார்கள். அப்படியொரு ராஜாதான் இந்த கதையின் ஹீரோ; பெயர் ராவணன். அவர் தனக்கு பொருத்தமான நான்கு பேரை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு மக்களை ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைலில் விதவிதமாக ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டுகிறார். ஒரு கட்டத்தில் கைதாகி சிறையில் நாட்களைக் கடத்துகிறார். தூக்கு தண்டனைக்கான நாளும் நெருங்குகிறது.

அவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார், எந்தளவுக்கு பணம் சம்பாதித்தார், போலீஸில் எப்படி சிக்கினார் என்பதெல்லாம் ஸ்கிரீன்பிளே… கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பம் இருக்கிறது.

படத்தை இயக்கியிருக்கிற கார்த்தீஸ்வரனே கதைநாயகன் ராவணனாக நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக அவர் போடும் திட்டங்கள் புத்திசாலித்தனமாகவும், போடுகிற கெட்டப்கள் காமெடியாகவும் இருக்கிறது. நடிப்பில் குறையில்லை. அசத்தலாக ஆடவும் செய்கிறார்.

மோசடிக்கார ராவணன் செல்வாக்கானவர்; அதையெல்லாம் தாண்டி அவரை சட்டப்படி தண்டிப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து காரியம் சாதிக்கும் இன்ஸ்பெக்டராக ஸ்ரீநிதி. கவர்ச்சியான உடற்கட்டுடன் வலம்வரும் அவரது நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.

ராவணனின் மோசடி பார்ட்னர்களாக பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் கூட்டணி தேவையான பங்களிப்பை ரசிக்கும்படி செய்திருக்கிறது.

லிவிங்ஸ்டன், கிரிக்கெட் வீராங்கனை மிருதுளா சுரேஷ் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு சரியான விகிதத்தில் கதையில் கலந்திருக்கிறது. பாடலொன்றுக்கு வழக்கம்போல் குட்டைப் பாவாடையில் குத்தாட்டம் போட்டிருக்கிறார் அஸ்மிதா.

தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் ஒரு பாடல், நடிகர் ஜெய் குரலில் ஒரு பாடல் என அணிவகுக்க அவறுக்கு தன் இசையால் எனர்ஜியேற்றியிருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி இசையில் இரைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறார். என்.எஸ்.ராஜேஷின் ஒளிப்பதிவு நேர்த்தி.

மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இயக்குநரின் நோக்கம். சுவாரஸ்யமாக எடுத்துக் காட்டியிருப்பது படத்தின் பலம். படத்தின் மூலம் நடத்தியிருப்பது சமூக விழிப்புணர்வுப் பாடம்.

Rating 3.5 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this