HomeCinema‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் பெரியளவில் வரவேற்பு! உற்சாகத்தில் தேவயானி

‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் பெரியளவில் வரவேற்பு! உற்சாகத்தில் தேவயானி

Published on

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாககூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது ஒரு போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம்.

திரையரங்கு உரிமையாளர்களும் ஒடிடி நிறுவனங்களும் கூட இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் மீது தங்கள் பார்வையை திருப்ப துவங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் குடும்பக் கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் தான் நிழற்குடை.

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வெளியான இப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப்படம் இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் சொல்லியிருந்தது.
,
இந்த படம் வெளியான போது நாளிதழ்கள் இணையதளங்கள், யூட்யூப் சேனல்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றதோடு, திரையரங்கில் பார்த்து ரசிகர்களும் ஒரு உணர்வுபூர்வமான படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது என தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்படி திரையரங்கில் வரவேற்புடன் ஓடிய நிழற்குடை படம் தற்போது ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஓடிடியில் படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை பல லட்சம் நிமிடங்கள் நிழற்குடை படம் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் திரையரங்குகளில் இந்த அருமையான கதை அம்சம் கொண்ட படத்தை பார்க்க தவறியவர்கள் கூட ஓடிடியில் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதை கண்டு, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து படத்தை தூணாக தாங்கி பிடித்திருந்த தேவயானி உற்சாகத்தில் இருக்கிறார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this