Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaஇயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார்; அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை...

இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார்; அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்! -‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் நட்டி நட்ராஜ் பெருமிதம்

Published on

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம்  ‘நிறம் மாறும் உலகில்.’ வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடந்தது.

நிகழ்வில், படத்தை இயக்கியுள்ள பிரிட்டோ பேசியபோது” இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான். அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் அதனை பார்த்து ரசிப்பீர்கள்.

மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ், ”அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார்.

இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்” என்றார்.

நடிகர் ரியோ ராஜ், ”நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்” என்றார்.

படத்தை தயாரித்துள்ள கேத்ரின் ஷோபா, படத்திற்கு இசையமைத்துள்ள தேவ்பிரகாஷ், படத்தில் நடித்துள்ள ஏகன், விஜி சந்திரசேகர்,காவ்யா அறிவுமணி, ஜீவா சுப்பிரமணியம், ஆதிரா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன், ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் குறித்து பேசினார்கள்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!