HomeCinemaசதுரங்க விளையாட்டுப் பின்னணியில் சமூகப் பிரச்சனையை பேசும் படைப்பாக ஹெச்.வினோத்தின் உதவியாளர் இயக்கும் 'நாற்கரப் போர்'...

சதுரங்க விளையாட்டுப் பின்னணியில் சமூகப் பிரச்சனையை பேசும் படைப்பாக ஹெச்.வினோத்தின் உதவியாளர் இயக்கும் ‘நாற்கரப் போர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் படம் ‘நாற்கரப் போர்.’

இறுகப்பற்று படம் மூலம் கவனம் ஈர்த்த அபர்ணதி கதாநாயகியாக நடிக்க,  மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கபாலி, பரியேறும் பெருமாள் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து மனிதர்கள் பலரையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

தற்போது இப்படத்தின் டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி பேசும்போது, “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்கு பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது.

அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்க்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, ஜாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” என்றார்.

பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவள்ளது.

சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்கள் குகை மா புகழேந்தி.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...