HomeCinemaஹிட்டானதும் புதியதுமாய் ஒரு டஜன் தெலுங்குப் படங்களை ஒளிபரப்பப் போகும் நெட்ஃபிலிக்ஸ்! பொங்கலன்று வெளியான அறிவிப்பால்...

ஹிட்டானதும் புதியதுமாய் ஒரு டஜன் தெலுங்குப் படங்களை ஒளிபரப்பப் போகும் நெட்ஃபிலிக்ஸ்! பொங்கலன்று வெளியான அறிவிப்பால் குஷியான ஓடிடி ரசிகர்கள்.

Published on

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஓடிடி உரிமம் பெற்ற 12 தெலுங்கு படங்கள் குறித்து அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்தப் பின்னர், தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பின் மாயாஜாலத்தை தங்களின் வீடுகளில் வசதியாகப் பார்க்கலாம்.

நெட்ஃபிக்ஸ் தங்களின் சமூக ஊடக தளங்களில் இந்த 12 தலைப்புகளின் ஸ்னீக் பீக் மூலம் உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2023ல் ‘போலா ஷங்கர்’, ‘தசரா’, ‘ப்ரோ’, ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி’, ‘மேட்’ மற்றும் ‘குஷி’ போன்ற படங்களைப் பார்த்து ரசித்தனர். இப்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் படங்களுக்காக காத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்போது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா 2’, ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ மற்றும் பிரபாஸின் ‘சலார்’ ஆகிய படங்கள் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை. இந்தப் படங்கள் தான் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் விபி, மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்துகொள்வதாவது, “நெட்ஃபிலிக்ஸின் தென்னிந்திய பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் 50% ஆண்டு வளர்ச்சி தெலுங்கு திரைப்படங்களை வைத்துதான் இருக்கிறது. இந்த ஆண்டு, தெலுங்கில் மாஸ் ஹீரோக்களுடைய பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளோம். சிறந்த தெலுங்கு சினிமாவை இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this