HomeGeneralதென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

Published on

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். நிதி அகர்வாலை பொறுத்தவரை, வெற்றி என்பது அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம்.
‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பின்போது, ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஷெட்யூலை திறம்பட சமாளித்து நடித்து கொடுத்தார். கடினமாக உழைப்பதும் தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்வதும் பிடித்தமான விஷயங்கள் என்கிறார் நிதி அகர்வால். இதுபற்றி நடிகை நிதி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “எனது இலக்குகள்தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. இயல்பிலேயே நான் கடினமாக உழைப்பவள். நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ, அந்த இடத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
நிதி அகர்வாலின் அடுத்தகட்டப் பயணம் பல்வேறு மொழிகள், கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக தனது நடிப்புப் பயணத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னணி நடிகர்களின் பிரம்மாண்டமான படங்களில் தன்னையும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதை நிதி அகர்வால் தெளிவுபடுத்தியுள்ளார். திரைப்படத்தின் பிரம்மாண்டத்துடன் கதையின் உள்ளடக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறார். ஒரு நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்த நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களையும் கதாபாத்திரங்களையும் எதிர்பார்த்துள்ளார். இதற்கான களம் தமிழ் சினிமா என்பதையும் இங்கு பதிவு செய்கிறார் நிதி அகர்வால்.
திரையுலகிலும் ரசிகர்களின் மனதிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே நிதி அகர்வாலின் விருப்பம். இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா எனப் பல்வேறு மொழித் திரையுலகில் பணிபுரிவது அவருக்கு நல்ல அனுபவம் என்கிறார். சமீபத்தில், நடிகர் பவன் கல்யாணுடன்‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் பிரபாஸூடன் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்கள் அவரது திரைப்பயணத்திற்கு மேலும் கவனம் பெற்றுத் தந்துள்ளன. தமிழ் சினிமாவிலும் இதுபோல நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்த்துள்ளார் நிதி அகர்வால்.
நிதி அகர்வாலைப் பொறுத்தவரை, தான் காதலிக்கும் சினிமாவில் வெறுமனே திரையில் தோன்றுவது மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமாவின் அடையாளம் காணக்கூடிய பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...