HomeGeneral‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்' நிறுவனத்திலிருந்து, இசைத் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்க உருவாகும் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்.'

‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்திலிருந்து, இசைத் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்க உருவாகும் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்.’

Published on

டைனமிக் பொழுதுபோக்கு நிறுவனமான ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பல்வேறு வழிகளில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ என்ற பெயரில் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், வளர்ந்து வரும் இசைத் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர ஒரு தளத்தை துவங்குகிறது.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் சொந்த தயாரிப்புகளில் இருந்து அற்புதமான இசையமைப்புகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஒலிப்பதிவு உலகில் புதிய மற்றும் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டு வரும் சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து இசைத் துறையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குவதை ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனர் மற்றும் புரொடியூசர் ராமச்சந்திர சக்கரவர்த்தி இதுபற்றி கூறும்போது, ‘‘இந்த மியூசிக் லேபிள் கலை மற்றும் ஆக்கப்பூர்வ ஆய்வுக்கான தளமாக உருவாக்கியுள்ளோம். உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகெங்கிலும் உள்ள விதவிதமான இசைத்துணுக்குகள் மற்றும் மாறுபட்ட ஒலிப்பதிவுகளின் தொகுப்பை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.

மம்முட்டி நடிப்பில், கிறிஸ்டோ சேவியரின் இசையில் உருவாகியுள்ள ‘பிரம்மயுகம்’ என்ற மலையாள திரைப்பட விழாவில் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ அறிமுகமாகவிருக்கிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this