HomeCinemaஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு: வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு: வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

Published on

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக, மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசிய ‘ஒளடதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.

சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர் இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.
காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.

நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே…

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this