HomeCinemaதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவு... தேசிய கிக் பாக்ஸிங்...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவு… தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!

Published on

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025-ல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது.
நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் (TNSKA) முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதன் மூலம் இந்த சாதனையை அடைய முடிந்தது.
அடிமட்ட அளவில் கிக் பாக்ஸிங் திறமையாளர்களை கண்டறிந்து வளர்ப்பதிலும், குழந்தைகள் மற்றும் கேடட்கள் தேசிய அளவில் சிறந்து விளங்க ஒரு வலுவான தளத்தை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதுஇந்த வெற்றியின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this