HomeMovie Reviewமுஸ்தபா முஸ்தபா சினிமா விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா சினிமா விமர்சனம்

Published on

ஹீரோவுக்கு ஒரு சில தினங்களில் கல்யாணம். அந்த நேரமாகப் பார்த்து அவர் ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருக்கிற வீடியோ யூ டியூபில் ஏறிவிடுகிறது. அது கல்யாணப் பெண்ணின் கண்ணில் பட்டால் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கும்.

அப்படி ஏதும் நடப்பதற்குள் அந்த வீடியோவை டெலீட் செய்தாக வேண்டும். அந்த சதியை செய்தது யார் என கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கான முயற்சியில் இறங்கும் ஹீரோ வீடியோவை டெலீட் செய்தாரா, வீடியோவை அப்லோடு செய்த நபரை கண்டுபிடித்தாரா, எதற்காக அப்லோடு செய்யப்பட்டது என்ற காரணத்தை தெரிந்து கொண்டாரா என்பதையெல்லாம் அடுத்தடுத்த அதிரிபுதிரியான காட்சிகள் காண்பிக்க, கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு நமக்குள் ஏறிக் கொள்ள, கல்யாண மாப்பிள்ளை அந்த வீடியோவில் இடம்பெற்றது எப்படி என்ற சந்தேகம் துரத்துகிறது…

மனம் முழுக்க நிரம்பியிருந்த சந்தோஷத்தை தொலைத்துவிட்டு யார் செய்திருப்பார்கள், எதற்காக செய்திருப்பார்கள், வீடியோ லீக் ஆனது எப்படி என பல கேள்விகளோடு அங்குமிங்கும் அலைகிற ஹீரோ சதீஷின் நிலைமை பரிதாபம்தான் என்றாலும் அவர் சார்ந்த காட்சிகளும், அவரது நடிப்பும் கலகலவென சிரிக்க வைப்பதாகவே இருக்கிறது.

சதீஷுக்கு ஜோடியாக வருகிற மோனிகா சின்னகொட்லா ஜாலியான தருணமோ, கோபத்தில் கொந்தளிப்போ எதுவானாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் கச்சிதம்.

ஐஸ்வர்யா தத்தா வில்லங்க வீடியோவில் கவர்ச்சி விருந்தளிக்க, நண்பனாக வருகிற சுரேஷ் ரவி, அவருக்கு ஜோடியாக வருகிற மானஸா செளத்ரி, ஹேக்கராக வருகிற கருணாகரன், காமெடி வில்லனாக விஜய் டிவி புகழ் என மற்றவர்களும் அவர்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள். பாவல் நவகீதன் உள்ளிட்ட தேர்ந்த நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என கதைக்களத்தின் தேவைக்கேற்ப கலந்திருக்கின்றன.

சிறிய விஷயம் சீரியஸாகிற கதையை, காட்சிக்கு காட்சி சிரித்து மகிழும் அனுபவமாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன். காமெடி சப்ஜெக்டில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படத்துக்கு போவது நல்லது.

முஸ்தபா முஸ்தபா – ரசிக்கலாம் கலகலப்பா!

Rating –

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this