HomeCinemaஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், ரங்கோலி இயக்குநரின் தரமான படைப்பாக உருவான 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், ரங்கோலி இயக்குநரின் தரமான படைப்பாக உருவான ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

Published on

ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ், புதுமையான ஆக்சன் டிராமாவாக இயக்கியுள்ள படம் ‘மெட்ராஸ்காரன்.’ மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். அவர்களுடன் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியபோது, ”என் புரொடியூசர்  ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட கேட்காமல்  தயாரித்தார். இந்த படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நடிகர் கலையரசன், ”என் ஊர் மெட்ராஸ். ஆனால், இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன். வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார். மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் ஜெகதீஸ், ”நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது” என்றார்.

நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, நடிகர் சரண், இசையமைப்பாளர் சாம் சி எஸ், இயக்குநர் இளன், இளனின் தந்தை நடிகர் பாண்டியன் உள்ளிட்டோரும் பேசினர்.

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this