HomeCinemaபடத்தில் சிலருக்கு இருக்கும் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்! -மகாராஜா படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர்...

படத்தில் சிலருக்கு இருக்கும் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்! -மகாராஜா படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் நித்திலன்

Published on

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மகாராஜா’ கடந்த ஜூன் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும், படத்தின் வெற்றிக்கு விமர்சனங்களால் துணைநின்ற பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடந்தது.

நடிகர் விஜய்சேதுபதி பேசியபோது, “இந்த கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

படத்தின் இயக்குநர் நித்திலன், “என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள். ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் என தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ், பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன், எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், நடிகர் மணிகண்டன், நடிகை சாக்‌ஷனா, நடிகர் அருள்தாஸ், நடிகர் வினோத் சாகர், நடிகர் கல்கி, நடிகர் துரை, எடிட்டர் ஃபிலோமின்ராஜ் உள்ளிட்டோரும் நிகழ்வில் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this