Sunday, March 15, 2026
spot_img
HomeCinemaவிஜய்சேதுபதி தன்மையான மனிதர்; அவருடைய ஐம்பதாவது படம் என்பதால் 'மகாராஜா' ரொம்பவே ஸ்பெஷல்! -பத்திரிகையாளர் சந்திப்பில்...

விஜய்சேதுபதி தன்மையான மனிதர்; அவருடைய ஐம்பதாவது படம் என்பதால் ‘மகாராஜா’ ரொம்பவே ஸ்பெஷல்! -பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் நித்திலன் பேச்சு

Published on

விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள மகாராஜா’ படத்தை, ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் விஜய்சேதுபதி  பேசியபோது, “என்னுடைய 50-வது படமாக ‘மகாராஜா’ அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். படத்தில் வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலை பார்த்துள்ளனர்” என்றார்.

இயக்குநர் நித்திலன், “விஜய்சேதுபதி தன்மையான மனிதர். அவருடைய ஐம்பதாவது படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சுதன் சாருக்கு நன்றி. என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை மம்தா மோகன்தாஸ், “‘எனிமி’ படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட ‘மகாராஜா’ படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது சார் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகை அபிராமி, “விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி” என்றார்.

நடிகர் ராட்சசன் வினோத் சாகர், “‘ராட்சசன்’ பட டீச்சர் பாத்திரத்தில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது” என்றார்.

எடிட்டர் ஃபிலோமின்ராஜ், “இந்தப் படத்தில் பஸூல் போல தொடர்ந்து முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே இருக்கும். ஆடியன்ஸோடு சேர்ந்து படம் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

 

 

 

Latest articles

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...

கெணத்த காணோம் சினிமா விமர்சனம்

வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி...

More like this

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...
error: Content is protected !!