HomeCinemaசோனி எல்ஐவி.யில் ஏப்ரல் 22முதல் தமிழ் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி!

சோனி எல்ஐவி.யில் ஏப்ரல் 22முதல் தமிழ் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி!

Published on

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது.

மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாகும்.  பிரபல சமையற்கலை நிபுணர்களான செஃப் கௌசிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் செஃப் ராகேஷ் ரகுநாதன் தமிழ் பதிப்பிலும் மற்றும் செஃப் சஞ்சய் தும்மா, செஃப் நிகிதா உமேஷ் மற்றும் செஃப் சலபதி ராவ் ஆகியோர் தெலுங்கு பதிப்பிலும் பங்கேற்று தங்கள் நிபுணத்துவத்தை சுவையோடும், நேர்த்தியோடும் காட்சிப்படுத்தவிருக்கின்றனர்.  எனவே, இந்தியாவின் கலாச்சார மரபுகளையும், பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ தயாராகுங்கள்.

சமையலுக்குப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும், செய்முறை குறிப்பிலும், ரெசிபிக்களிலும் பல தலைமுறைகள் வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதை இந்நிகழ்ச்சி அழகாக எடுத்துரைக்கும்.

உங்கள் நாட்காட்டியில் இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  சுவையான இப்பயணத்தை நாங்கள் தொடங்கும்போது எங்களோடு இணைந்து, எமது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்.  சோனி எல்ஐவி அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஒளிபரப்ப ப்படவிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சிகளை தவறாமல் கண்டு ரசியுங்கள்!

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...