HomeGeneralபுதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி தக்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை...

புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி தக்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

Published on

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’.
இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார்,  அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் அழகான வரிகளுடன் சிறப்பான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இப்படதை சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.
‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Latest articles

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை! –ஹிப்ஹாப் தமிழா ஆதி

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு...

மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி...

More like this