HomeMovie Reviewமண்டாடி சினிமா விமர்சனம்

மண்டாடி சினிமா விமர்சனம்

Published on

கதையம்சமுள்ள படங்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக திரைக்கு வந்திருக்கிற ‘மண்டாடி.’

பாய்மரப் படகுப் போட்டியை கெளரவமாக நினைக்கிற ராமநாதபுரத்துக் கடலோர கிராமம். வெற்றிக் கோப்பைகளை தட்டித் தூக்கிக் கொண்டிருக்கும் நண்பர்கள் இருவர். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பகை உருவாக, அது ஒரு உயிர் பறிபோக காரணமாகிறது. 20 வருடங்கள் கடந்தோட அந்த பகையாளிகள் மீண்டும் போட்டிக்காக கடலில் இறங்குகிறார்கள். அந்த போட்டியும் அதன் விளைவுகளுமாய் விரியும் அடுத்தடுத்த காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது… இயக்கம் மதிமாறன் புகழேந்தி

சூரிக்கு வாழ்நாள் முழுக்க பெயர் சொல்லப் போகும் படம். படகுப் போட்டியை உயிருக்கு உயிராக நினைப்பது, போட்டியில் வெற்றிபெற உயிரைப் பணயம் வைப்பது, சண்டைக் காட்சியில் மாஸ் காட்டுவது, குற்ற உணர்ச்சியில் தவிப்பது என நடிப்பில் தான் வருகிற அத்தனைக் காட்சியையும் பாராட்டும்படி செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் படும்பாடு சிலிர்ப்பூட்டாமல் விடாது.

சூரியை துரோகி என தவறாகப் புரிந்து கொண்டு வாழ்நாளைக் கழிப்பவராக, அந்த கோபத்தை வன்மத்துடன் வெளிப்படுத்துபவராக மஹிமா நம்பியாரின் ஃபெர்பாமென்ஸை எக்ஸலன்ட் என தாராளமாய் சொல்லலாம்.

தன் பகுதி இளைஞர்களுக்கு படகு சாகசத்தை கற்றுக் கொடுப்பவராக சத்யராஜ். தோற்றத்தில் வித்தியாசம் காட்டி தனது காட்சிகளில் தான்தான் ஹீரோ என்கிற அளவுக்கு அடித்து ஆடியிருக்கிறார். தெலுங்கு தேசத்து நடிகர் சுஹாஸ் தமிழ்த் திரையுலகுக்கு கிடைத்திருக்கும் மிரட்டலான வில்லன்,  அனல் கக்கும் கண்களுடன் சூழ்ச்சி, துரோகம் என புகுந்து விளையாடியிருக்கிறார்.

மஹிமாவின் கணவராக ரவீந்திர விஜய், மஹிமா – ரவீந்திர விஜய் தம்பதியின் மகனாக மிதுன் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முக்கிய கேரக்டர்கள். அர்ப்பணிப்பான நடிப்பு காட்சிகளை பலப்படுத்துகிறது.

பால சரவணன், கிருத்திகா பாலசுப்ரமணியன், கிரிஷ்ஹாசன், ரேகா குமணன், ஆடுகளம் முருகதாஸ், ராம்ஸ், பத்மன் என மற்றவர்களுக்கும் கவனத்தில் பதிகிற பாத்திரங்கள்.

அலையின் சீற்றம்போலிருக்கிறது அதிரடியான கதையோட்டத்துக்கு ஜி வி பிரகாஷின் பின்னணி இசை. பாடல்கள்  வெவ்வேறு பாணியிலான இசைக்கலவையில் புரட்டியெடுக்கப்பட்டு வித்தியாசம் காட்டுகிறது.

படம் முழுக்க கடலும் கடல் சார்ந்த பகுதிகளுமாக இருக்க தன் ஒளிப்பதிவால் படத்துக்கு உச்சபட்ச மைலேஜ் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர்.

விளையாட்டுப் போட்டிகள் எப்படியான விபரீதங்களையெல்லாம் உருவாக்கும் என்பதை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு, அந்த சம்பவங்களை முழுக்க முழுக்க படகுப் பந்தயத்தை மையப்படுத்திய படைப்பில் பெறுவது நிச்சயம் புது அனுபவம்தான். இரண்டாம் பாதி பழிவாங்கும் அத்தியாயங்களாக கடப்பது லேசான சோர்வைத் தர, நீளமான அந்த கிளைமாக்ஸ் எனர்ஜியை எக்கச்சக்கமாக ஏற்றிவிடுகிறது.

மிரட்டலான மேக்கிங், திரையிலும் திரைக்குப் பின்பும் பங்களித்திருக்கிற அனைவரின் அசரவைக்கும் உழைப்பு படத்திற்கு அதிரிபுதிரியான வெற்றியை பரிசளித்திருக்கிறது!

Rating 4 / 5

Latest articles

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்க்லூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால்,...

உற்சாகமாக நடைபெற்ற ‘இம்மார்டல்’ படத்தின் வெற்றி விழா! -நாயகன் ஜி வி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்

ஜி வி பிரகாஷ் - கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர்...

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன்! நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின்...

எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’, ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில்...

More like this