HomeGeneralரக்ஷன் நடிக்கும் மேரிகோல்ட் படத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறது பிரபு - சுகன்யா...

ரக்ஷன் நடிக்கும் மேரிகோல்ட் படத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறது பிரபு – சுகன்யா ஜோடி!

Published on

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் மேரிகோல்ட் திரைப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறுகிறது. ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் அமைகிறது.
இத்திரைப்படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார். கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜெய் விஜய் ராகவண், கலை: ஜி. துரைராஜ், நடனம்: தீபு எம், ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீனிவாசன்.
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘மேரிகோல்ட் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this