HomeGeneralதண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா... 'மிஸ்டர் X’ படத்தில் அதிரடி...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

Published on

நடிகர் ஆர்யா ‘மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “தமிழ் சினிமா இதுவரை முயற்சிக்காத ஒன்றை இந்தப்படத்தில் நடிகர் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் எந்த ஆடையும் இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கினார்” என்கிறார்..
.
விரைவில் வெளிவரவிருக்கும் அதிரடி உளவு திரைப்படமான ‘மிஸ்டர் X’-ல், முக்கியமான தண்ணீருக்கு அடியிலான ஒரு காட்சிக்காக நடிகர் ஆர்யா எந்த அளவிற்கு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார் என்றால் சமீபகாலத்தில் ஒரு தமிழ் நடிகர் மேற்கொண்ட மிகவும் உடலளவிலான சவாலான சாதனைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். இத்திரைப்படத்தின் தொடக்க காட்சியான இது மும்பையில் உள்ள 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. மேவரிக் மூவிஸ் பி லிட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை, மனு ஆனந்த் இயக்கியுள்ளார்..

பெரும்பாலும் இந்திய சினிமாவில் இதுபோன்ற தண்ணீருக்கடியிலான காட்சிகள் ஆறு அடி ஆழத்தில் மூழ்கிய மேடைகளைப் பயன்படுத்தி தான் படமாக்கப்படுகின்றன.. ஆனால் மிஸ்டர் X-ல் அது சாத்தியமில்லை. காரணம் அந்த காட்சியில் ஆர்யா ஆழமான கடலில் 20 அடி ஆழத்திற்கு உள்ளே செல்வது போல தத்ரூபமாக சித்தரிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆழம் தான் ஆர்யாவுக்கு உடல் ரீதியான மிகுந்த சவால்களை கொண்டு வந்தது., குறிப்பாக 15 முதல் 16 டிகிரி வரை இருந்த நீரின் வெப்பநிலை மிகவும் கடினமான சோதனையாக இருந்தது.
.
இந்த அனுபவம் குறித்து நாயகன் ஆர்யா கூறும்போது, “நாம் ஆழமாக இறங்க இறங்க, நீரின் வெப்பநிலை குறைந்து சுமார் 15 முதல் 16 டிகிரி வரை இருந்தது, பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில். உடலில் ஆடையின்றி நடிக்கும்போது, உடல் நடுங்கக் கூடாது.. 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டே நடுக்கத்தை கட்டுப்படுத்துவது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய சவாலாக இருந்தது” என்கிறார்.

உண்மை தான். அந்த ஆழத்தில் உடலில் ஆடையின்றி நடிக்கும்போது, உறைந்த குளிருக்கு எந்த வெளிப்படையான உடல் எதிர்வினையும் தெரியாமல் இருக்க, அதே நேரத்தில் கேமரா முழுமையாக நம்பும் அளவிற்கு நடிப்பையும் வழங்க, ஆர்யா முழுமையான உடல் கட்டுப்பாட்டைப் பேண வேண்டியிருந்தது.

இந்த காட்சியை படமாக்க தேவையான சாதனங்களை. தண்ணீருக்குள் கொண்டு செல்வதற்காக திரும்பத் திரும்ப மேலே ஏறி கீழே இறங்குவதால் ஏற்படும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காக ஆர்யாவும் கேமரா குழுவினரும் ஒவ்வொரு முறையும் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை தொடர்ச்சியாக நீருக்கடியிலேயே இருந்தனர். இது தனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் உடல் ரீதியாக சவாலான அனுபவம் என்கிற ஆர்யா, “”நாங்கள் ஒருமுறை தண்ணீருக்கு அடியில் சென்றால், கேமரா குழுவினர் உட்பட அனைவரும் அங்கேயே இருந்தோம். ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் கழித்துதான் மேலே வர முடியும்.” என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் மிகுந்த கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தொழில்நுட்ப ரீதியாக அனைத்தும் கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது… தண்ணீருக்கடியிலான ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் மூலம், இயக்குனர் மனு ஆனந்தின் அறிவுறுத்தல்களை ஆர்யா கேட்கவும், காட்சிகளுக்கு இடையே தனது நடிப்பு குறித்த நேரடியான கருத்துக்களை பெறவும் முடிந்தது. தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு ஆர்வமும் அர்ப்பணிப்புமாக இருக்கிறது என்பதை இது துல்லியமாக காட்டுகிறது.

இந்த தண்ணீருக்கடியிலான காட்சியானது, இயக்குநர் மனு ஆனந்த் மிஸ்டர் X-படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் இதேபோல முத்திரையை பதித்துள்ளார் என்பதற்கான சான்றாக இருக்கிறது. இதற்கு முன்னதாகவே தனது விரிவான ஆராய்ச்சி மற்றும் உண்மைத்தன்மையின் மீதான அர்ப்பணிப்பிற்காக அறியப்பட்டவர் என்கிற வகையில், 1965 முதல் 2023 வரை இந்தியாவில் நடந்த ஏழு உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் மனு ஆனந்த். படத்தின் அதிரடி காட்சிகள் என்பது வெறுமனே பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தவேண்டும் என்பதற்காக உருவாக்கப்படாமல், யதார்த்தத்தில் உடல் ரீதியான நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே உறுதியாக நின்றார் மனு ஆனந்த்.

காட்சிகளுக்கு இடையே தனது உடல் நடுங்கிய போதும் கூட, இயக்குநர் “ஆக்‌ஷன்” என்று சொன்ன தருணத்தில் முழுமையாக அசையாமல் இருக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டதாக ஆர்யா கூறினார். மேற்பரப்பிலிருந்து 20 அடி கீழே, கிட்டத்தட்ட உடலை உறையவைக்கும் அந்த குளிர்ந்த நீரில், மணிக்கணக்கில் தொடர்ந்து அந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது என்பது ஒரு தயாரிப்பு நிறுவனம் தனது நடிகர்களிடம் எதிர்பாக்கும் அர்ப்பணிப்பை ஆர்யா கொடுத்துள்ளார் என்பதைஎ பறைசாற்றுகிறது…

“ஆனாலும் திரையில், அந்த காட்சியை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் படத்தை பார்க்கும்போது, இந்த காட்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள்.” என்கிறார் ஆர்யா.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....