HomeCinemaமகளிர் தினத்தை முன்னிட்டு 'மயிலா' படத்தின் டீசர் வெளியானது!

மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மயிலா’ படத்தின் டீசர் வெளியானது!

Published on

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மயிலா’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.
https://www.youtube.com/watch?v=lsqelNqSRo8
மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது.
“மயிலா” உலகத் திரையரங்கில் முதன்முதலாக International Film Festival Rotterdam (IFFR) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக சினிமாவில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் Bright Future பிரிவில் இப்படம் இடம்பெற்றது. மேலும், ஆசிய திரைப்படங்களையும் படைப்பாளர்களையும் கௌரவிக்கும் Network for the Promotion of Asian Cinema வழங்கும் NETPAC Award-க்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
இயக்குநர் செம்மலர் அன்னம் கூறுகையில், இந்தப் படம் பெண்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து வந்த உணர்வுகளால் உருவானதாக தெரிவித்தார்:
“நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்ததில் இருந்து ‘மயிலா’ உருவானது. பல பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது. அவர்களின் பொறுமையும், மரியாதையும், உறுதியும் இந்தக் கதைக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது. மகளிர் தினத்தில் டீசரை வெளியிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன், ஏனெனில் இந்தப்படம் அதற்கான முகாந்திரங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது என்று கூறினார். “
இந்தப் படத்தை வழங்கும் பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் கூறுகையில், “மயிலா” படம் அதன் நேர்மையாலும் உணர்ச்சி ஆழத்தாலும் தனித்துவமாக திகழ்கிறது என்று கூறினார்:
“மயிலா” அதன் உண்மையான அணுகுமுறையால் மனதில் நிற்கும் படம். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கருணையுடனும் நிஜத்தன்மையுடனும் இது சித்தரிக்கிறது. இப்படிப்பட்ட படங்களை ஆதரிப்பது முக்கியம், ஏனெனில் அவை பார்க்கப்படவும் கேட்கப்படவும் வேண்டிய குரல்களையும், அனுபவங்களையும் முன்வைக்கின்றன.”
திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ சிட்டிலப்பில்லி கூறுகையில், மயிலா படத்திற்கு சர்வதேச ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக தெரிவித்தார்:
“தொடக்கத்திலிருந்தே ‘மயிலா’ அதன் சூழலைத் தாண்டியும் பலரின் மனதைத் தொடும் கதையைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்பினோம். ரொட்டர்டாம் விழாவில் நடந்த பிரீமியரும் NETPAC பரிந்துரையும் எங்கள் குழுவுக்கு மிகவும் சிறப்பான தருணங்கள். மகளிர் தினத்தில் டீசரை வெளியிட்டுள்ள இந்த தருணத்தில், பெண்களின் வலிமையும் மனிதத்தன்மையும் கொண்டாடப்படும் ஒரு படத்தின் சிறு முண்ணோட்டத்தை ரசிகர்கள் ரசிபார்கள் என்று நம்புகிறோம்.”
நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைசொல்லல் மூலமும், சர்வதேச அளவில் கிடைக்கும் கவனம் மூலமும் “மயிலா”  திரைப்படம் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான மற்றும் உலகளாவிய பார்வையை திரைக்கு கொண்டு வரும் முயற்சியாக தொடர்ந்து பயணிக்கிறது.
“மயிலா” திரைப்படத்தை செம்மலர் அன்னம் எழுதி இயக்கியுள்ளார். இதை பா . ரஞ்சித் வழங்குகிறார். Newton Cinema நிறுவனத்தின் கீழ் ஆண்டோ சிட்டிலப்பில்லி தயாரித்துள்ளார்.
“மயிலா” திரைப்படத்தின் டீசர் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களில் வெளியாகியுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...