HomeCinemaபழைய காலத்து ராஜா ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஃபேண்டஸியாக உருவாக்கப்பட்டுள்ளது! -'மரகதமலை'...

பழைய காலத்து ராஜா ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஃபேண்டஸியாக உருவாக்கப்பட்டுள்ளது! -‘மரகதமலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ். லதா

Published on

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள ‘மரகதமலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் லதா பேசியபோது, ”கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.

தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.
மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என்றார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியபோது, ”இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.
நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி” என்றார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this