HomeCinemaமக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது

Published on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீசரில், மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை எதை மையமாகக் கொண்டது என்பது குறித்து முழு விவரம் வெளியாகாதபோதிலும், டீசர் மிகப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம் மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். முன்பு ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என அற்புதமான இரண்டு படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட படைப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மனித உணர்வுகள், சமூக அரசியலின் நுணுக்கங்கள் மற்றும் இயல்பான கதை சொல்லும் பாணியில் தனித்துவம் கொண்ட இயக்குநர் மணிகண்டன், இந்த OTT முயற்சியிலும் அதே வலிமையை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் எளிமையான ஆனால் ஆழமான நடிப்பு, கதைக்கு மேலும் உயிரூட்டும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இந்த டீசர் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இந்த சீரிஸில் நடிகர் பட்டியலிலும் பல வலுவான பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், வி ஜெ பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்துறை அனுபவம் கொண்ட இந்த நடிகர்கள் இணைந்திருப்பது, சீரிஸின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

முத்து என்கிற காட்டான் தமிழ் ஓடிடி உலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியாகும் முக்கியமான சீரிஸாக பார்க்கப்படுகிறது. டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் படைப்பாக இது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...