HomeCinemaகதை எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது; வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தில்...

கதை எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது; வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது! -மெல்லிசை பட அனுபவம் பகிர்கிறார் நடிகர் கிஷோர்

Published on

கிஷோர் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ள ‘மெல்லிசை’ திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில் 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘இணைய உள்ளது.

அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.

திரவ் எழுதி இயக்கியுள்ள ’மெல்லிசை’ படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது.

பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் இந்த படம் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this