HomeCinemaதிரவ் இயக்கத்தில் கவிதையாக உருவான 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவை பாராட்டி வாழ்த்திய இயக்குநர்...

திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவை பாராட்டி வாழ்த்திய இயக்குநர் வெற்றிமாறன்!

Published on

இயக்குநர் வெற்றிமாறன் நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி ஆதரவளிப்பது வழக்கம். அந்த வகையில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, “முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘ என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. ‘மெல்லிசை’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

வெற்றிமாறனின் வாழ்த்துக்கு ‘மெல்லிசை’ படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை ‘மெல்லிசை’ பேசுகிறது.

படத்தில் ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள ‘மெல்லிசை’ அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ‘ அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘ என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this