HomeCinemaராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்டில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும்  ‘மைசா’ பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான் இந்தியப் படமாக தயாராகவிருக்கிறது. இந்த படத்தின் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து படம் இன்று 27.07.2025 பூஜையுடன் தொடங்கப்பட்டது. நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

சுரேஷ் பாபு கிளாப் போர்டு அடிக்க, ரவி கிரண் கோலா கேமராவை இயக்கினார். ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்த ஹனு ராகவபுடி, முஹூர்த்த ஷாட்டுக்கு கௌரவ இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது, முதல் கட்டமாக ராஷ்மிகா படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைகிறார்.

கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் வளமான மற்றும் வசீகரிக்கும் உலகில், ஆழமான கதையுடன் ஆக்சன் நிரம்பிய உணர்ச்சிபூர்வமான அதிரடி திரில்லராக இந்த படம் உருவாகிறது. ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட,  இதுவரை தோன்றாத அவதாரத்தில், அழுத்தமான  மற்றும் உணர்ச்சி ஆழம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் பி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகளை கல்கி 2898 AD-யில் பணியாற்றி புகழ்பெற்ற ஆண்டி லாங் அமைக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this