உளவியல் திரில்லராக ஒரு எழுத்தாளரின் மனநிலை மற்றும் கற்பனை vs யதார்த்தம் என கலந்து கட்டி உருவாகியுள்ள படம்.
நாவலாசிரியர் வாசன், தனது கதாபாத்திரங்களில் மூழ்கிப் போகிறார். அவர் உருவாக்கும் கற்பனை, அவரை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது.
‘கற்பனை நம்மை கட்டுப்படுத்த முடியுமா?’ என்பது கதையின் சிந்தனைக்குரிய கேள்வி. அந்த கேள்விகளுக்குப் பதில்களாய் காட்சிகள் சுவாரஸ்யமாய் விரிகின்றன.
எழுத்தாளராக வாசனாக நாகராஜன் கண்ணன் இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு.
காயத்ரி, டெல்லி கணேஷ், சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் துணை வேடங்களில் நல்ல நேர்த்தி.
ஒவ்வொரு கதாபாத்திரமும் உளவியல் ஆழத்துடன் கருவாகி உருவாகியுள்ளது.
ஒளிப்பதிவில் சில காட்சிகள் அழகாக, சில CG காட்சிகள் இயற்கைக்கு
பாடல்களின் இசை கச்சிதம். பின்னணி இசை கதாபாத்திரங்களின் மனநிலை மாற்றங்களுக்கு ஒத்துப்போகிறது.
திரைக்கதை சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது சீரான ஓட்டமாகவே மனதைக் கவ்விப் பிடிக்கிறது.
வித்தியாசமான கதைக் களம், உளவியல் அடிப்படை சிந்தனைகள், நம்பகமான நடிப்பு, தரமான திரைக்கதை படத்தின் பலம்.
இந்த சிந்தனையூட்டும் படைப்பு வணிக ரீதியைவிட கலைமிக்க சினிமாவைப் விரும்பும் பார்வையாளர்களுக்கான சிறந்த தேர்வு!

