HomeCinemaதிரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த 'மரியா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள படம் ‘மரியா.’

புதுமுகம் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில் அன்பினைப் பேசும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் உலகின் பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இந்திய திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த இசை என பல விருதுகளையும் பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த பூமியில் சூழலில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள். அன்பின் பாதை எல்லோருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண் , அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள். அவளின் அன்பு ஜெயிக்கிறதா? அவள் கனவு நனவானதா ? என்பதே இப்படத்தின் கதைகளம்.

ஒவ்வொரு தவறுக்குப் பின்னும் ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்த்தில் அறிமுக நடிகை சாய்ஸ்ரீ பிரபாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாவல் நவகீதன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this